செங்கல்பட்டு மாவட்டத்தில் சசிகலா 9-ம் தேதி சுற்றுப்பயணம்


செங்கல்பட்டு மாவட்டத்தில் சசிகலா 9-ம் தேதி சுற்றுப்பயணம்
x

செங்கல்பட்டு தொகுதிக்கு உட்பட்ட முக்கிய பகுதிகளில் வரும் 9-ம் தேதி சசிகலா தொண்டர்களை சந்திக்கிறார்.

சென்னை,

சசிகலா புதிய ஆண்டில் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். அதன்படி 9-ந்தேதி செங்கல்பட்டு தொகுதிக்கு உட்பட்ட முக்கிய பகுதிகளில் தொண்டர்களை சந்திக்கிறார்.

இதற்காக சசிகலா 9-ந்தேதி மதியம் 3 மணிக்கு சென்னை தியாகராய நகரில் உள்ள வீட்டில் இருந்து புறப்பட்டு கிண்டி, குரோம்பேட்டை, தாம்பரம், வண்டலூர் வழியாக கொளப்பாக்கம் செல்கிறார். அங்கிருந்து மறைமலை நகர், சிங்கப்பெருமாள் கோவில், செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம், திருக்கழுக்குன்றம் ஆகிய பகுதிகளில் தொண்டர்களையும் பொது மக்களையும் சந்திக்கிறார்.

சுற்றுப்பயணத்தில் ஈடுபடும் சசிகலாவை வரவேற்க தொண்டர்கள் முக்கிய இடங்களில் வரவேற்பு ஏற்பாடு செய்து வருகின்றனர்.


Next Story