சாத்தான்குளம் மேரி இம்மாகுலேட் பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை


சாத்தான்குளம் மேரி இம்மாகுலேட் பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை
x
தினத்தந்தி 20 Oct 2023 6:45 PM GMT (Updated: 20 Oct 2023 6:46 PM GMT)

சாத்தான்குளம் மேரி இம்மாகுலேட் பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.

தூத்துக்குடி

தட்டார்மடம்,:

இந்திய இளைஞர் பாரம்பரிய சிலம்பம் சங்கம் தஞ்சாவூர் பாரத் கல்லூரியில் தேசிய அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் சுமார் 1000-க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். இதில் சாத்தான்குளம் மேரி இம்மாகுலேட் மெட்ரிக் பள்ளி 7-ம் வகுப்பு மாணவன் ஜூவன்ராஜ், 8-ம் வகுப்பு மாணவி ஜெனட் ரோஸ்லின், 9-ம் வகுப்பு மாணவி ஜெருஷா ஸ்வீட்டி, மாணவன் ஜெனரஸ் திபி வெள்ளி பதக்கத்தையும், 3-ம் வகுப்பு மாணவர்கள் ஷம்ரோகித், ஜெவின் ராஜ், 5-ம் வகுப்பு மாணவி ஜோ அமிர்தா, 7-ம் வகுப்பு மாணவன் ஜூவன்ராஜ், 8-ம் வகுப்பு மாணவி ஜெனட் ரோஸ்லின் 9-ம் வகுப்பு மாணவி ஜெருஷா ஸ்வீட்டி, மாணவன் ஜெனரஸ் திபி போட்டியில் பங்கு பெற்று தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்தனர். இந்த மாணவ, மாணவியருக்கு பள்ளி தாளாளரும் முதல்வருமான அருட்தந்தை பேட்ரிக் அந்தோணி விஜயன், சிலம்பம் பயிற்சியாளர் கலைவளர் மணி, லட்சுமணன், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.


Next Story