சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் காலி தட்டுகளை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டம்


சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் காலி தட்டுகளை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 Oct 2022 12:15 AM IST (Updated: 16 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஒலக்கூர் ஒன்றிய அலுவலகம் முன்பு சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்கள் காலி தட்டுகளை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டம்

விழுப்புரம்

திண்டிவனம்

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் ஒலக்கூர் ஒன்றிய கிளை சார்பில் திண்டிவம் அருகே உள்ள சாரம் பகுதியில் உள்ள ஒலக்கூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தலைவர் சரோஜா தலைமை தாங்கினார். பத்மாவதி, ராதாகிருஷ்ணன், நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை தலைவர் நாராயணன் வரவேற்றார். செயலாளர் குருசாமி தொடக்க உரையாற்றினார். அபராஜிதன் வாழ்த்துரை வழங்கினார். மாநில தணிக்கையாளர் கிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற்றினார். இதில் கலந்துகொண்டவர்கள் காலி தட்டுகளை கையில் ஏந்தியபடி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் ஆலோசனைப்படி சமூக நல இயக்குனர் பரிந்துரைத்ததாக கூறப்படும் சட்டபூர்வமான பென்ஷன் ரூ.7 ஆயிரத்து 850-ஐ வழங்க வேண்டும், குடும்ப ஓய்வூதியம், அகவிலைப்படி, மருத்துவ காப்பீட்டு திட்டம், ஈமக்கிரியை செலவுத் தொகை மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வுதியர்கள் கலந்துகொண்டனர். முடிவில் சாரங்கபாணி நன்றி கூறினார்.


Next Story