சத்தியமங்கலம், அந்தியூர், கோபி பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம்

சத்தியமங்கலம், அந்தியூர், கோபி பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
சத்தியமங்கலம் அருகே உள்ள செண்பகப்புதூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதனால் சத்தியமங்கலம், காந்தி நகர், ரங்கசமுத்திரம், பஸ் நிலையம், கோணமூலை, வி.ஜ.பி.நகர், செண்பகப்புதூர், உக்கரம், அரியப்பம்பாளையம், சுண்டக்காபாளையம், சின்னாரிபாளையம், சிக்கரசம்பாளையம், கெஞ்சனூர், அய்யன் சாலை, தாண்டாம்பாளையம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.இந்த தகவலை சத்தியமங்கலம் மின்சார வாரிய செயற்பொறியாளர் பி.குலசேகர பாண்டியன் தெரிவித்து உள்ளார்.
இதேபோல் அந்தியூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதனால் அந்தியூர், புதுப்பாளையம், மைக்கேல்பாளையம், நகலூர், முனியப்பன்பாளையம், தோப்பூர், கொண்டையம்பாளையம், வெள்ளையம்பாளையம், பிரம்மதேசம், காட்டூர், செம்புளிச்சாம்பாளையம், பருவாச்சி, பச்சாபாளையம், பெருமாபாளையம், சங்கராபாளையம், எண்ணமங்கலம், கோவிலூர், வெள்ளித்திருப்பூர், பர்கூர் மலைப்பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் விநியோகம் இருக்காது.இந்த தகவலை பவானி மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் வெங்கடேசன் தெரிவித்து உள்ளார்.
கோபி அருகே உள்ள கொளப்பலூர் துணை மின் நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை யூனிட்டி நகர், காமராஜ் நகர், செட்டியம்பாளையம், மல்லநாயக்கனூர், அங்கம்பாளையம், சாணார்பாளையம், லிங்கப்பகவுண்டன்புதூர், போக்குவரத்து நகர், குமரன் காலனி, அம்மன் கோவில்பதி, கொளப்பலூர், சமத்துவபுரம், அயலூர், தாழ்குனி, சொக்குமாரிபாளையம் ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் இருக்காது.
இந்த தகவலை மின்சார வாரிய செயற்பொறியாளர் பாபு தெரிவித்துள்ளார்






