இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 08-10-2025


தினத்தந்தி 8 Oct 2025 9:18 AM IST (Updated: 9 Oct 2025 8:51 AM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • வயநாடு நிலச்சரிவு: பாதிக்கப்பட்டோரிடம் கடன்களை வசூலிக்க வங்கிகளுக்கு தடை
    8 Oct 2025 7:44 PM IST

    வயநாடு நிலச்சரிவு: பாதிக்கப்பட்டோரிடம் கடன்களை வசூலிக்க வங்கிகளுக்கு தடை

    நீங்கள் யாரை ஏமாற்றப் பார்க்கிறீர்கள்? உங்களுக்கு நடவடிக்கை எடுக்க விருப்பம் இல்லை. செய்ததெல்லாம் போதும்! உங்களின் தொண்டுள்ளம் எங்களுக்குத் தேவையில்லை. வயநாடு நிலச்சரிவு பேரிடரில் பாதிக்கப்பட்டோரின் கடன்களை ரத்து செய்ய சட்டத்தில் வழியில்லை என வாதிட்ட மத்திய அரசு வழக்கறிஞரிடம் கேரள ஐகோர்ட்டு காட்டமாக தெரிவித்துள்ளது.

  • வெளிநாடு செல்ல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு அனுமதி மறுப்பு
    8 Oct 2025 6:59 PM IST

    வெளிநாடு செல்ல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு அனுமதி மறுப்பு

    தொழிலதிபரை ரூ.60 கோடி மோசடி செய்ததாக எழுந்த புகாரில் ஷில்பா ஷெட்டிக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சி ஒன்றுக்காக இலங்கை செல்ல அனுமதி கோரி மும்பை உயர்நீதிமன்றத்தை அணுகினார் ஷில்பா ஷெட்டி. ரூ.60 கோடி டெபாசிட் செய்தபிறகே வெளிநாடு செல்ல முடியும் என நீதிமன்றம் தெரிவித்தது.

  • மதுரை அருகே குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலப்பு
    8 Oct 2025 5:34 PM IST

    மதுரை அருகே குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலப்பு

    மதுரை மாவட்டம் அமச்சியாபுரம் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலப்பு என புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க அமச்சியாபுரம் கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளது. குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவை கலந்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்த கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். உரிய விசாரணை நடத்தப்படும் என மதுரை எஸ்.பி. அரவிந்தன் கூறியுள்ளார்.

  • யுஜிசி நெட் தேர்வுக்கு நவம்பர் 7 வரை விண்ணப்பிக்கலாம்
    8 Oct 2025 4:58 PM IST

    யுஜிசி நெட் தேர்வுக்கு நவம்பர் 7 வரை விண்ணப்பிக்கலாம்

    ugcnet.nta.nic.in என்ற இணையதளம் வழியாக தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்; கூடுதல் தகவல்களை www.nta.ac.in எனும் இணையதளத்தில் அறியலாம்; 011-69227700/40759000 எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் கல்லூரி உதவிப் பேராசிரியர் பணி, இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகை, பிஎச்டி சேர்க்கைக்கு நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

  • நடிகை லட்சுமி மேனனுக்கு முன் ஜாமீன்
    8 Oct 2025 4:55 PM IST

    நடிகை லட்சுமி மேனனுக்கு முன் ஜாமீன்

    ஐ.டி.ஊழியரை கடத்தி, தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகை லட்சுமி மேனனுக்கு முன்ஜாமீன் வழங்கியது கேரள ஐகோர்ட்டு. தங்களுக்குள் சுமூகத் தீர்வு ஏற்பட்டதாக ஐடி ஊழியர் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

  • தெருக்களின் சாதிப் பெயர்களை நீக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
    8 Oct 2025 4:47 PM IST

    தெருக்களின் சாதிப் பெயர்களை நீக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

    முதல்-அமைச்சர் அறிவிப்பின்படி தமிழ்நாட்டில் குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர் நிலைகளுக்கு வைக்கப்பட்டுள்ள சாதிப் பெயர்களை நீக்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தெருக்கள் மற்றும் சாலைகளுக்கு திருவள்ளுவர், கபிலர், பாரதியார், பாரதிதாசன், தந்தை பெரியார், அண்ணா, காமராஜர், கலைஞர் பெயர்களையும், குளம் மற்றும் நீர் நிலைகளுக்கு ரோஜா, மல்லி, முல்லை ஆகிய பூக்களின் பெயர்களை வைக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  • 8 Oct 2025 4:44 PM IST

    நவி மும்பை விமான நிலையம் திறப்பு

    நவிமும்பையில் புதிய விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். சுமார் 20,000 கோடி செலவில் அதிநவீன வசதிகளுடன் இந்தியாவின் பிரமாண்ட விமான நிலையமாக இது உருவாகியிருக்கிறது.

  • ஆந்திர பட்டாசு ஆலையில் விபத்து
    8 Oct 2025 3:50 PM IST

    ஆந்திர பட்டாசு ஆலையில் விபத்து

    ஆந்திரா - அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தில் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் 8 பேர் தீக்காயங்களுடன் மீட்புகப்பட்டுள்ளனர். தீயை அணைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளார்களா? என தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

  • வேதியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு
    8 Oct 2025 3:31 PM IST

    வேதியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு

    2025 ஆண்டு வேதியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. சுசுமு கிடகாவா, ரிச்சர்ட் ராப்சன், ஒமர் எம். யாகி ஆகிய மூவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

  • தவெக நிர்வாகி பவுன்ராஜின் ஜாமீன் மனு தள்ளுபடி
    8 Oct 2025 3:27 PM IST

    தவெக நிர்வாகி பவுன்ராஜின் ஜாமீன் மனு தள்ளுபடி

    தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகனுக்கு அடைக்கலம் கொடுத்ததாக கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள பவுன்ராஜின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூர் சம்பவம் தொடர்பான சிறப்பு புலனாய்வு குழு விசாரணை ஆரம்ப நிலையில் இருப்பதால், ஜாமீன் கொடுக்க முடியாது என நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

    கரூர் த.வெ.க. கூட்டத்தில் நெரிசலில் சிக்கியவர்களை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸின் ஓட்டுநர் தாக்கப்பட்ட வழக்கில், சேலத்தைச் சேர்ந்த த.வெ.க. உறுப்பினரான மணிகண்டன், கரூர் நீதிமன்றத்தில் சரணடைந்து முன்ஜாமீன் கோரியுள்ளார்.

1 More update

Next Story