சத்தியமங்கலம் மார்க்கெட்டில் கனகாம்பரம் பூ கிலோ ரூ.560-க்கு ஏலம்
சத்தியமங்கலம் மார்க்கெட்டில் கனகாம்பரம் பூ கிலோ ரூ.560-க்கு ஏலம் போனது.
ஈரோடு
சத்தியமங்கலம்
சத்தியமங்கலத்தில் உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று வழக்கம்போல் பூக்கள் ஏலம் நடந்தது. இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 3 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
நேற்றைய ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.350-க்கும், முல்லை ரூ.180-க்கும், காக்கடா ரூ.300-க்கும், செண்டுமல்லி ரூ.40-க்கும், பட்டுப்பூ ரூ.93-க்கும், ஜாதிமல்லி ரூ.500-க்கும், கனகாம்பரம் ரூ.560-க்கும், சம்பங்கி ரூ.10-க்கும், அரளி ரூ.60-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.240-க்கும் ஏலம் போனது.
Related Tags :
Next Story