சத்துணவு, அங்கன்வாடி சங்க கூட்டமைப்பினர் கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்


சத்துணவு, அங்கன்வாடி சங்க கூட்டமைப்பினர் கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்
x

கள்ளக்குறிச்சியில் சத்துணவு, அங்கன்வாடி சங்க கூட்டமைப்பினர் கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் பொன்னுசாமி தலைமை தாங்கினார். சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு அடிப்படை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முத்துகுமாரசாமி, அம்மாசி, சாவித்திரி, தர்மன் உள்பட 50-க்கும் மேற்பட்டவர்கள் தங்களது கண்களில் கருப்பு துணியை கட்டியவாறு கோஷங்களை எழுப்பினர்.


Next Story