காங்கிரஸ் கட்சி சார்பில் சத்தியாகிரக போராட்டம்


காங்கிரஸ் கட்சி சார்பில் சத்தியாகிரக போராட்டம்
x

காங்கிரஸ் கட்சி சார்பில் சத்தியாகிரக போராட்டம் நடந்தது.

கரூர்

ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை, எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து சத்தியாகிரக போராட்டம் நடத்தப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்திருந்தார். இதனையொட்டி நேற்று கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் உள்ள காந்தி சிலை முன்பு கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட பொருளாளர் மெய்ஞானமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story