சவுக்கு சங்கர் உத்தரவாத மனு தாக்கல் செய்ய வேண்டும்- சென்னை ஐகோர்ட்டு


சவுக்கு சங்கர் உத்தரவாத மனு தாக்கல் செய்ய வேண்டும்- சென்னை ஐகோர்ட்டு
x

எதிர்காலத்தில் எப்படி நடந்து கொள்வார் என சவுக்கு சங்கர் உத்தரவாத மனு தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது

சென்னை,

பெண் போலீசாரை அவதூறாக பேசிய வழக்கில் 'யூடியூப்பர்' சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது கஞ்சா உள்ளிட்ட வழக்குகளும் பாய்ந்துள்ளது. குண்டர் தடுப்பு சட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் , குண்டர் தடுப்பு சட்ட உத்தரவை ரத்து செய்து தனது மகனை விடுவிக்க வேண்டும் எனக்கோரி சவுக்கு சங்கரின் தாயார் கமலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.பி. பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு, சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைத்து பிறப்பித்த உத்தரவு தொடர்பான அனைத்து அசல் ஆவணங்களையும் இன்று பிற்பகல் 2:15 மணிக்குள் தாக்கல் செய்ய சென்னை காவல் ஆணையருக்கு உத்தரவிட்டனர். அதன்படி, சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைத்து பிறப்பித்த உத்தரவு தொடர்பான அசல் ஆவணங்கள் இன்று தாக்கல் செய்யப்பட்டது

அசல் ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதிகள், எதிர்காலத்தில் எப்படி நடந்து கொள்வார் என சவுக்கு சங்கர் உத்தரவாத மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு இறுதி விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர் . மேலும் , என்னவெல்லாம் செய்ய மாட்டார் என பட்டியலிட்டு தெரிவிக்க வேண்டும். முதல்-அமைச்சரை ஒருமையில் அழைத்துள்ளார். இதை ஏற்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story