கரூர்-நொய்யல் பகுதிகளில் சாரல் மழை


கரூர்-நொய்யல் பகுதிகளில் சாரல் மழை
x

கரூர்-நொய்யல் பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

கரூர்

தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்தவகையில் கரூரில் நேற்று முன்தினம் இரவு சுமார் 1 மணி நேரம் சாரல் மழை பெய்தது. இந்நிலையில் நேற்று காலை முதல் சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. இந்த சாரல் மழையானது கரூர், தாந்தோன்றிமலை, காந்திகிராமம், வெங்கமேடு, பசுபதிபாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது விட்டுவிட்டு பெய்து வருகிறது. இதனால் கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

இதேபோல் நொய்யல், குறுக்குச்சாலை, குந்தாணிப்பாளையம், நத்தமேடு, புன்னம்சத்திரம், புன்னம், குட்டைக்கடை, பழமாபுரம், திருக்காடுதுறை, தவிட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று சாரல் மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கரூர் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு விவரம் (மில்லிமீட்டரில்):- கரூர்-1.2, அரவக்குறிச்சி-6, அணைப்பாளையம்-4.3, குளித்தலை-1, தோகைமலை-1.4, கிருஷ்ணராயபுரம்- 1.8, மாயனூர்-2, பஞ்சப்பட்டி-15.4, மைலம்பட்டி-3, மொத்தம்-36.10.


Related Tags :
Next Story