செங்கோல் யாத்திரை தொடக்க விழா
ஜோலார்பேட்டையில் செங்கோல் யாத்திரை தொடக்க விழா நடைபெற்றது.
ஜோலார்பேட்டை நகரம் மற்றும் ஒன்றிய காங்கிரஸ் கட்சி சார்பில் செங்கோல் யாத்திரை தொடக்க விழா ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூரில் உள்ள காமராஜர் சிலை அருகே நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆர்.ஆர்.விநாயகமூர்த்தி தலைமை தாங்கினார். ஜோலார்பேட்டை நகர பொறுப்பாளர் ஸ்டாலின் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக மாநில பொது செயலாளரும், திருப்பத்தூர் மாவட்ட தொகுதி பொறுப்பாளமான அருள் அன்பரசு கலந்து கொண்டு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி செங்கோல் யாத்திரையை தொடங்கி வைத்தார்.
பின்னர் பேசுகையில், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிப்பது உறுதியாகிவிட்டது. ராஜீவ்காந்தி பாத யாத்திரை நடத்தி வெற்றி பெற்று, மீண்டும் கர்நாடக மாநிலத்தில் பெரும்பான்மையான அளவில் ஆட்சி பிடித்தது. தமிழகத்தில் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவது உறுதி. எனக்கு திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தால் போட்டயிிட்டு வெற்றி பெறுவேன் என்றார்.
விழாவில் மாவட்ட பொது செயலாளர்கள் மணி, ஓ.பி.சி. பிரிவு கோபாலகிருஷ்ணன், கந்திலி ஒன்றிய காங்கிரஸ் தலைவர் மகாராஜன், ஒன்றிய பொது செயலாளர் குமார், வக்கீல் நாகராஜன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கோவிந்தசாமி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர், நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் உள்பட பல கலந்து கொண்டனர்.