அரசு அறிவித்த திட்டங்களை பயனாளிகளுக்கு உரிய முறையில் கொண்டு சேர்க்க வேண்டும்
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் பொருளாதார முன்னேற்றத்திற்காக அரசுஅறிவித்துள்ள திட்டங்களை பயனாளிகளுக்கு உரிய முறையில் கொண்டு சேர்க்க வேண்டும் என்று மேலாண்மை இயக்குனர் தெரிவித்தார்.
சிவகங்கை,
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் பொருளாதார முன்னேற்றத்திற்காக அரசுஅறிவித்துள்ள திட்டங்களை பயனாளிகளுக்கு உரிய முறையில் கொண்டு சேர்க்க வேண்டும் என்று மேலாண்மை இயக்குனர் தெரிவித்தார்.
ஆலோசனை
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குனர் நந்தகோபால், நேற்று சிவகங்கைக்கு வருகை தந்தார். பின்னர் அவர், பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்கள், மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்களுடன் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார். அப்போதுஅவர் கூறியதாவது:-
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் பொருளா தார முன்னேற்றத்திற்காக ஏராளமான திட்டங்களை தமிழக முதல்-அமைச்சர் அறிவித்து செயல்படுத்தி வருகிறார். வங்கி களின் மூலம் தனிநபர் மற்றும் குழுக்கடன்கள், கிறிஸ்துவ மற்றும் முஸ்லிம் மகளிர் சிறுபான்மையினர் சுயதொழில் தொடங்க கடன் உதவிகள், பொதுக்காலக்கடன்கள், சிறுகடன் வழங்கும் திட்டம், புதிய பொற்காலத்திட்டம், ஆடவருக்கான சிறுகடன், கறவை மாடு கடன் ஆகியவை செயல்படுத்தப்படுகிறது.
புதிய கடன் திட்டங்களான இளம் தொழிற்கல்வி பட்டதாரிகளுக்கு சுயதொழில் தொடங்க கடன், மரபு சார்ந்த கலைஞர்கள் மற்றும் கைவினை கலைஞர்கள் தொழில்திறனை மேம்படுத்தவும், சுயதொழில் தொடங்க கடன், சிறு விவசாயிகள் மற்றும் காய்கறி பயிரிடுவதற்கான சிறுகடன் திட்டம், சிறு குறு விவசாயிகளுக்கு நீர்ப்பாசன வசதிகளை அமைக்க மானியத்துடன் கூடிய கடன் போன்ற பல்வேறு கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நலத்திட்ட உதவி
அரசின் திட்டங்களின் பயன்களை உரிய பயனாளிகளுக்கு கொண்டு சேர்க்க அலுவலர்கள் இணைந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பின்னர் 6 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜீனு, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலஅலுவலர் தனலெட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.