கல்லூரி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை
வித்யாசாகர் மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் நூலக வங்கியில் புத்தகங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
செங்கல்பட்டு வித்யாசாகர் மகளிர் கல்லூரியில் ராஜஸ்தான் இளைஞர் சங்கம் இணைந்து நடத்தும் கல்வி ஊக்கத்தொகை வழங்குதல் மற்றும் நூலக வங்கியில் புத்தகங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. வித்யாசாகர் கல்லூரி தாளாளர் விகாஸ் சுரானா தலைமை தாங்கினார். துணை முதல்வர் அருணாதேவி முன்னிலை வகித்தார். கல்லூரியின் நிதி கட்டுபாட்டு அலுவலர் ஆதேஷ்குமார் ஜெயின் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர்களாக ஏ.எம்.ஜெயின் கல்லூரியின் செயலாளர் மற்றும் தாளாளருமான உதன் குமார் சோர்டியா டி.வி.எஸ். கிரிடிட் சர்வீஸ் துணைத்தலைவர் அருண்குமார், ஆர்.ஒய்.எ.செயலாளர் ஆஷிஷ் ஜெயின், தலைவர்கள் மகாவீர் ஜெயின், கட்மல் ஜெயின் ஆகியோர் கலந்து கொண்டு ஏப்ரல் 2022 -ம் ஆண்டுக்கான தேர்வில் பல்கலைக்கழக அளவில் வகுப்பு வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த 75 மாணவிகளுக்கு கல்லூரி கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் கல்வி கட்டண சலுகையும், கல்லூரி மாணவிகள் 300 பேருக்கு புத்தகங்களும் வழங்கினார்கள்.