குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய மாணவர் படை பயிற்சி வகுப்பு
குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய மாணவர் படை பயிற்சி வகுப்பு
குமாரபாளையம்:
குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6-வது ஆண்டாக தேசிய மாணவர் படை மாணவர்களுக்கான பயிற்சி வகுப்பு நடந்தது. ஈரோடு 15-வது பட்டாலியன் கமாண்டிங் அதிகாரி கர்னல் ஜெய்தீப், நிர்வாக அதிகாரி 15 லெப்டினென்ட் கர்னல் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் ஆணையின்படி பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி தேசிய மாணவர் படை அலுவலர் அந்தோணிசாமி ஒவ்வொரு ஆண்டும் 50 மாணவர்களை தேர்ந்தெடுத்து பயிற்சி வழங்கி வருகிறார். இவற்றில் துப்பாக்கி சுடுதல் அவற்றை பிரித்து பூட்டுதல், தூரத்தை கணக்கிடுதல் வரைப்பட பயிற்சிகள், உயரம் தாண்டுதல், 10 நாட்கள் முகாம் பயிற்சிகள் மற்றும் என்.சி.சி.ஏ. சான்றிதழ் வழங்கப்படுகின்றன. இந்த சான்றிதழ்கள் மூலம் காவல்துறை, ராணுவம், ரெயில்வே துறை வேலைவாய்ப்புகளிலும், மேற்படிப்புகளுக்கான இட ஒதுக்கீடுகளிலும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆடலரசு, ஈரோடு 15-வது பட்டாலியன் ஹவில்தார் தேவராஜ், கார்த்தி மற்றும் விடியல் ஆரம்பம் பிரகாஷ், ராஜேந்திரன், 50 தேசிய மாணவர் படை மாணவர்கள் கலந்து கொண்டனர்.