அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு வழங்க விலையில்லா சைக்கிள் தயார்

அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்காக விலையில்லா சைக்கிள் தயார் நிலையில் உள்ளன.
அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்காக விலையில்லா சைக்கிள் தயார் நிலையில் உள்ளன.
விலையில்லா சைக்கிள்
தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு சீருடைகள், புத்தகப்பை, கணித உபகரணப்பெட்டி, நோட்டு புத்தகங்கள், சைக்கிள்கள், வண்ண பென்சில்கள், வண்ண கிரையன்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் பிளஸ்-1 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்படுகிறது.
அதன்படி இந்த ஆண்டு அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளது. இதையொட்டி ஈரோடு அரசு மாதிரி மேல்நிலை பள்ளிக்கூடம் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிக்கூடங்களுக்கும் ஏற்கனவே சைக்கிள்களின் உதிரி பாகங்கள் வந்து இறங்கின.
பிளஸ்-1 மாணவ-மாணவிகள்
இதைத்தொடர்ந்து சைக்கிள்களை தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் சைக்கிள்கள் முழுமையாக பொருத்தப்பட்டு மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்காக தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. விலையில்லா சைக்கிள்களை வாங்குவதற்கும் மாணவ-மாணவிகள் ஆர்வமாக உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடங்களில் பிளஸ்-1 படிக்கும் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் பள்ளிக்கூடம் திறக்கப்பட்ட உடன் விரைவில் வழங்கப்பட உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






