25 சதவீத இடஒதுக்கீட்டில் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு முதன்மை கல்வி அதிகாரி தகவல்

விழுப்புரம் மாவட்டத்தில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என்று முதன்மை கல்வி அதிகாரி கிருஷ்ணப்பிரியா தெரிவித்துள்ளார்.
விழுப்புரம்,
இதுகுறித்து முதன்மை கல்வி அதிகாரி கிருஷ்ணப்பிரியா தெரிவித்துள்ளார். வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
25 சதவீத இடஒதுக்கீட்டில் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர
இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
முதன்மை கல்வி அதிகாரி தகவல்25 சதவீத இடஒதுக்கீட்டில் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர
இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
முதன்மை கல்வி அதிகாரி தகவல்
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் படி 2022- 2023-ம் கல்வியாண்டிற்கு 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் (எல்.கே.ஜி. அல்லது முதல் வகுப்பு) அதாவது பள்ளி எந்த வகுப்பில் ஆரம்பிக்கிறதோ அந்த வகுப்பில் சேர்க்கை 20.4.2022 முதல் 18.5.2022 வரை rte.tnschools.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய அனுமதிக்கப்பட்டது.
அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் 17.5.2022 வரை 2,975 விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் மாநில முதன்மை தொடர்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரின் செயல்முறைகளின்படி பொதுமக்கள் நலன் கருதி இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய 19.5.2022 முதல் 25.5.2022 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
குலுக்கல்
பெறப்படும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து தகுதியான விண்ணப்பங்கள் சார்ந்த விவரங்களும், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருப்பின் அதற்கான காரணங்களும் இணையதளத்திலும், சம்பந்தப்பட்ட பள்ளி தகவல் பலகையிலும் 28.5.2022 மாலை 5 மணிக்கு வெளியிடப்படும்.
மேலும் தகுதியான விண்ணப்பங்கள் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு இருப்பின் சம்பந்தப்பட்ட பள்ளியில் 30.5.2022 அன்று குலுக்கல் நடத்தப்பட்டு சேர்க்கைக்கு தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளின் பெயர் பட்டியல் விண்ணப்ப எண்ணுடன் 31.5.2022 அன்று இணையதளத்திலும், சம்பந்தப்பட்ட பள்ளியின் தகவல் பலகையிலும் வெளியிடப்படும். சேர்க்கைக்கு தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளை 3.6.2022-க்குள் சம்பந்தப்பட்ட பள்ளியில் பெற்றோர்கள் சேர்க்க வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






