பள்ளி ஆண்டு விழா


பள்ளி ஆண்டு விழா
x
தினத்தந்தி 20 Aug 2023 12:15 AM IST (Updated: 20 Aug 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் அருகே விஜயராமபுரம் முத்தாரம்மன் இந்து நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளம் அருகே விஜயராமபுரம் ஸ்ரீமுத்தாரம்மன் இந்து நடுநிலைப்பள்ளி 39-வது ஆண்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு பள்ளி தலைவர் வேல்சாமி தலைமை தாங்கினார். பள்ளி செயலர் திருமணி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை கனகா வரவேற்றார். இதில் பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர்கள், முன்னாள் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெகதீசபாண்டி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதில் ஆதிசக்தி எனும் புராதன நாடகம் நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். உதவி ஆசிரியர் சண்முகராஜ் நன்றி கூறினார்.


Next Story