காதல் வலையில் விழுந்த பள்ளி மாணவன்: பத்தாம் வகுப்பு மாணவியை கடத்தியதால் பரபரப்பு

காதல் வலையில் விழுந்த பள்ளி மாணவன்: பத்தாம் வகுப்பு மாணவியை கடத்தியதால் பரபரப்பு
x

சேலம் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பள்ளி மாணவியை 12-ம் வகுப்பு மாணவன் கடத்தி சென்றதாக கூறப்பட்ட புகாரில், இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

சேலம்

சேலம் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பள்ளி மாணவியை 12-ம் வகுப்பு மாணவன் கடத்தி சென்றதாக கூறப்பட்ட புகாரில், இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

ஓமலூர் அருகே தனியார் பள்ளியில் படித்து வரும் 10-ம் வகுப்பு மாணவியை 12-ம் வகுப்பு மாணவன் கடத்தி சென்றதாக மாணவியின் பெற்றோர் போலீசில் புகாரளித்தனர். இதன் அடிப்படையில், விசாரணை நடத்தி வந்த போலீசாருக்கு, மாணவி வசிக்கும் அதே பகுதியை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவர் ஒருவர் மாணவியை காதலித்து வந்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி மாணவன் கடத்தி சென்றதாக புகாரில் தெரிவிக்கப்பட்ட நிலையில், மாணவனின் செல்போன் சிக்னலை வைத்து இருவரையும் போலீசார் தேடி .வருகின்றனர்.

Next Story