நாகை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை


நாகை மாவட்டத்தில்  பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
x
தினத்தந்தி 8 Dec 2022 7:00 PM GMT (Updated: 8 Dec 2022 7:01 PM GMT)

நாகை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம்

வங்க கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயல் புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இது தீவிர புயலாகவே நகர்ந்து பிறகு சற்றே வலுக்குறைந்து கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று நாகையில் காற்று வழக்கத்தை விட சற்று வேகமாக வீசியது. மதியத்துக்கு மேல் மழை பெய்தது. குளிர்ந்த காற்றோடு மழை விட்டு விட்டு பெய்தது. எனவே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் அவதிப்பட்டனர். புயல் எச்சரிக்கை காரணமாக நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் அறிவித்துள்ளார்.


Next Story