தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில்தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்களில்டீசல் திருடும் மர்ம கும்பல்போலீசார் விசாரணை


தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில்தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்களில்டீசல் திருடும் மர்ம கும்பல்போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 11 Oct 2023 12:30 AM IST (Updated: 11 Oct 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்களில் இரவு நேரத்தில் டீசல் திருடும் மர்ம கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தர்மபுரி

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்களில் இரவு நேரத்தில் டீசல் திருடும் மர்ம கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளி, கல்லூரி வாகனங்கள்

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 300-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி, கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்வி நிறுவனங்களின் மூலம் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள், வேன்கள் உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்படுகிறது. பெரும்பாலான வாகனங்கள் அந்தந்த கல்வி நிறுவனங்களில் இருந்து காலை நேரத்தில் புறப்பட்டு மாணவ, மாணவிகளை அழைத்து வருகிறது. மீண்டும் மாலை நேரத்தில் மாணவ, மாணவிகளை அவரவர்களின் சொந்த ஊரில் விட்டு விட்டு மீண்டும் அந்தந்த கல்வி நிறுவனங்களுக்கு வாகனங்கள் திரும்பி வந்து விடுகிறது.

தொலைதூரத்தில் உள்ள கிராமங்களில் இருந்து மாணவ, மாணவிகளை அழைத்து வருவதற்காக ஒரு சில பஸ்கள் மற்றும் வேன்கள் குறிப்பிட்ட கிராமத்திலேயே நிறுத்தப்படுகிறது. காலை நேரத்தில் அந்த வாகனங்கள் கிராமப்புறங்களில் இருந்து மாணவ, மாணவிகளை அழைத்துக்கொண்டு கல்வி நிறுவனங்களுக்கு சென்று விட்டு மீண்டும் மாலை அதே கிராமங்களுக்கு திரும்பி சென்று இரவு நேரங்களில் கிராமங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுகிறது.

டீசல் திருட்டு

கடந்த சில மாதங்களாக கிராமப்புறங்களில் நிறுத்தப்படும் தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்களில் இருந்து இரவு நேரத்தில் மர்ம கும்பல் டீசல் திருட்டில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. தொடர்ந்து திருட்டு சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட வாகனங்களின் டிரைவர்கள் அந்தந்த கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகளிடம் புகார் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இந்த 2 மாவட்டங்களின் எல்லை பகுதியில் உள்ள கிராமங்களில் நிறுத்தப்படும் வாகனங்களில் இருந்துதான் டீசல் திருட்டு தொடர்ந்து நடந்து வருவதாக கூறப்படுகிறது.

பள்ளி, கல்லூரி வாகனங்களில் அடிக்கடி டீசல் திருட்டு போவதால் கிராமப்புறங்களில் இருந்து மாணவ, மாணவிகள் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு குறித்த நேரத்துக்குள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இந்த தொடர் சம்பவங்களால அதிர்ச்சிக்குள்ளான தனியார் பள்ளி, கல்லூரி நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட வாகனங்களின் டிரைவர்கள் மூலம் அந்தந்த போலீஸ் நிலையங்களில் இரவு நேரங்களில் டீசல் திருட்டு குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் டீசல் திருட்டு குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தனியார் பள்ளி, கல்லூரி நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் டீசல் திருட்டு குறித்து அந்தந்த போலீஸ் நிலையங்கள் மூலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story