பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்ட பயிற்சி


பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்ட பயிற்சி
x

கரூரில் பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்ட பயிற்சி நடைபெற்றது.

கரூர்

கரூர் மாவட்டத்தில் பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்ட பயிற்சி நேற்று ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இப்பயிற்சியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுமதி தொடங்கி வைத்தார். இப்பயிற்சியானது கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி வழிகாட்டி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், யுனிசெப் மற்றும் பள்ளிக்கல்வி துறையுடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. முதன்மை பயிற்சியாளர்கள் அமர்நாத் மற்றும் வாசுதேவன் ஆகியோர் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் வேலுசாமி மற்றும் முதன்மை கல்வி அலுவலக நேர்முக உதவியாளர் சாமிநாதன் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story