பொள்ளாச்சி ராமகிருஷ்ணா நகரில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
பொள்ளாச்சி ராமகிருஷ்ணா நகரில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
கோயம்புத்தூர்
பொள்ளாச்சி
பொள்ளாச்சி ராமகிருஷ்ணா நகர் நகராட்சி பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மேலாண்மை குழு தலைவர் சண்முகபிரியா தலைமை தாங்கினார். முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியை பூங்கொடி வரவேற்று பேசினார். கூட்டத்தில் பள்ளி கல்வித்துறை அறிவித்து உள்ள புதிய பாரத எழுத்தறிவு திட்டம், பள்ளி வளர்ச்சிக்கு தேவையான உட்கட்டமைப்பு, ஆசிரியர்கள், பணியாளர்களின் காலியிடங்களை நிரப்புதல் தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் உள்ளாட்சி பிரதிநிதிகள் கவுதமன், வைஷ்ணவி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் ரிகானா, கல்வியாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் மற்றும் ஆசிரியைகள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story