ஆசிரியர்கள் விடுப்பால் திறக்கப்படாத பள்ளிக்கூடம்: கோவில் வளாகத்தில் காத்திருந்த மாணவர்கள்
வீரவநல்லூர் அருகே ஆசிரியர்கள் விடுப்பால் பள்ளிக்கூடம் திறக்கப்படாததால் மாணவர்கள் கோவில் வளாகத்தில் காத்திருந்தனர்.
திருநெல்வேலி
சேரன்மாதேவி:
வீரவநல்லூர் அருகே மானபரநல்லூர் காமராஜ் காலனியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 21 மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பணியாற்றி வருகின்றனர். நேற்று இவர்கள் 2 பேரும் விடுப்பு எடுத்ததால் பள்ளிக்கூடம் திறக்கப்படவில்லை.
இதனால் மாணவ-மாணவிகள் அருகில் உள்ள கோவில் வளாகத்தில் காத்திருந்தனர். இதனை அறிந்த மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் நேரில் சென்று விசாரணை நடத்தினார். தொடர்ந்து அருகில் உள்ள மற்றொரு பள்ளிக்கூடத்தில் இருந்து ஆசிரியரை தற்காலிகமாக மானபரநல்லூர் பள்ளிக்கூடத்துக்கு வரவழைத்து மாணவ-மாணவிகளுக்கு பாடம் கற்பிக்கப்பட்டது.
Related Tags :
Next Story