நீர்நிலைகளில் மனித கழிவுகள் கலப்பதால் ஏற்படும் தீங்குகள் குறித்து பள்ளி மாணவன் விழிப்புணர்வு


நீர்நிலைகளில் மனித கழிவுகள் கலப்பதால் ஏற்படும் தீங்குகள் குறித்து பள்ளி மாணவன் விழிப்புணர்வு
x

நீர்நிலைகளில் மனித கழிவுகள் கலப்பதால் ஏற்படும் தீங்குகள் குறித்து பள்ளி மாணவன் விழிப்புணர்வு பிரசாரம் நடத்தினார்.

கரூர்

உலக தண்ணீர் தினம் இன்று (புதன்கிழமை) கடைப்பிடிக்கப்படுகிறது. உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நேற்று கரூர் அருகே உள்ள ராமேஸ்வரப்பட்டியை சேர்ந்த 7-ம் வகுப்பு பள்ளி மாணவன் விஷ்வக்நித்தின் என்பவர், நீர் நிலைகளில் மலம் கழிப்பதையும், நீர் நிலைகளில் மலம் கழுவதையும் தடுக்கும் விழிப்புணர்வு முயற்சியை நடத்தினார். இதனையொட்டி கரூர் அமராவதி ஆற்று பகுதியில் தனது பெற்றோர் மற்றும் குழுவினருடன் இணைந்து ஆற்றில் மலம் கழிப்பதால் ஏற்படும் தீங்குகள் குறித்தும், அதனால் ஏற்படும் நோய்கள் குறித்தும் செயல் விளக்கம் செய்து காண்பித்தார். இதனைத்தொடர்ந்து பள்ளி மாணவன் விஷ்வக்நித்தின் கரூரில் உள்ள அமராவதி ஆற்றங்கரையோரம் மற்றும் வாங்கல், மோகனூர், வேலூர், காவிரி ஆற்றங்கரையோரம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் 5,000 பொதுமக்களுக்கு, நீர்நிலைகளில் இயற்கை உபாதையை கழிப்பதால் ஏற்படும் தீங்குகள் குறுத்த விழிப்புணர்வு நோட்டீஸ்களை வீடு, வீடாக சென்று வழங்கினார். இதுகுறித்து பள்ளி மாணவன் விஷ்வக்நித்தின் கூறும்போது, நீரை அசுத்தப்படுத்துவதால் உலக மக்கள் தொகையில் 25 சதவீதம் பேருக்கு அதாவது 200 கோடி பேருக்கு தூய்மையான நீர் கிடைப்பது இல்லை. மனிதன் பயன்படுத்தக்கூடிய நிலத்தடி நீர் அளவு 2.5 சதவீதம் மட்டுமே உள்ளது. இந்த நீரை தான் 800 கோடி உலக மக்கள் பயன்படுத்தும் நிலை உள்ளது. எனவே நீர்நிலைகளை சுத்தமாக வைத்திருந்தால் மட்டுமே தூய்மையான நீரை பருக முடியும், என்றார்.


Next Story