பள்ளி மாணவன் திடீர் சாவு


பள்ளி மாணவன் திடீர் சாவு
x
தினத்தந்தி 13 July 2023 12:53 AM IST (Updated: 13 July 2023 4:23 PM IST)
t-max-icont-min-icon

அரக்கோணத்தில் பள்ளி மாணவன் திடீர் என இறந்தான்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வின்டர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். அவரது மகன் ரோகித் (வயது 16), 11-ம் வகுப்பு படித்து வந்தான்.

நேற்று காலையில் ரோகித் வீட்டில் திடீரென மயங்கி உள்ளான். உடனே வீட்டில் இருந்தவர்கள் அவனை மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ரோகித் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவன் சாவுக்கு காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story