பள்ளி மாணவன் கிணற்றில் மூழ்கி பலி


பள்ளி மாணவன் கிணற்றில் மூழ்கி பலி
x

சிப்காட் அருகே நண்பர்களுடன் குளிக்க பள்ளி மாணவன் கிணற்றில் மூழ்கி பலியானான்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் பகுதியை சேர்ந்தவர் அனீப் (வயது 38). வெல்டிங் கடையில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகன் சையத் (10). அதேப் பகுதியில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் நண்பர்களுடன் புளியங்கண்ணு பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் குளிக்க சென்றுள்ளான்.

அப்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கியிருக்கிறான். இதனைக் கண்ட நண்பர்கள் கூச்சலிட்டதை தொடர்ந்து அங்கு வந்த பொதுமக்கள் சிலர் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலாஜி தலைமையிலான வீரர்கள், மாணவனை மீட்கும்பணியில் ஈடுபட்டனர்.

சுமார் 12 மணிநேரம் போராடி மாணவனை பிணமாக மீட்டனர். இந்த சம்பவம் குறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story