சுரண்டை பள்ளி மாணவர்கள் சாதனை


சுரண்டை பள்ளி மாணவர்கள் சாதனை
x
தினத்தந்தி 21 Oct 2022 12:15 AM IST (Updated: 21 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பல்கலை போட்டியில் சுரண்டை பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்

தென்காசி

சுரண்டை:

விவேகானந்திரா கேந்திரம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான பல்கலை போட்டி தென்காசி நேரு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. போட்டியில் 20-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். சுரண்டை எஸ்.ஆர்.ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளியிலிருந்து 22 மாணவா்களும், ராஜேந்திரா விஸ்டம் பள்ளியில் இருந்து 9 மாணவா்களும் கலந்து கொண்டனா்.

போட்டியில் பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, கதை சொல்லுதல், ஒப்புவித்தல், பாட்டுப்போட்டி, தனிநடிப்பு ஆகிய போட்டிகள் நடைபெற்றது. இதில் மாணவா்கள் ஸ்ரீரக்சா, ஸ்ரீாிஷா, நிபாஷினி, குருஷித், சுபநந்தன், சுஜித், அமிா்த வா்ஷினி, ஆாியா ஆகியோா் முதல் மற்றும் இரண்டாம் பாிசை பெற்றுள்ளனா்.

சாதனை படைத்த மாணவா்களை குழல்வாய்மொழி அம்மாள் சிவன் நாடாா் அறக்கட்டளை நிறுவனா் சிவபபிஸ்ராம், பள்ளி செயலா் சிவ டிப்ஜினிஸ்ராம், முதல்வா் பொன் மனோன்யா, தலைமை ஆசிாியா்கள் மாாிக்கனி, முருகராஜன் மற்றும் ஆசிாியா்கள் பாராட்டினா்.

1 More update

Next Story