பொள்ளாச்சி அருகே 2,500 விதைப்பந்துகள் தயாரித்து பள்ளி மாணவர்கள் அசத்தல்-ஆழியாறு, வால்பாறை பகுதிகளில் தூவ முடிவு


பொள்ளாச்சி அருகே 2,500 விதைப்பந்துகள் தயாரித்து பள்ளி மாணவர்கள் அசத்தல்-ஆழியாறு, வால்பாறை பகுதிகளில் தூவ முடிவு
x
தினத்தந்தி 3 Sep 2023 6:45 PM GMT (Updated: 3 Sep 2023 6:46 PM GMT)

பொள்ளாச்சி அருகே 2,500 விதைப்பந்துகள் தயாரித்து பள்ளி மாணவர்கள் அசத்தி உள்ளார்கள். மேலும், அவற்றை ஆழியாறு, வால்பாறை பகுதிகளில் தூவ முடிவு செய்யப்பட்டு உள்ளது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே 2,500 விதைப்பந்துகள் தயாரித்து பள்ளி மாணவர்கள் அசத்தி உள்ளார்கள். மேலும், அவற்றை ஆழியாறு, வால்பாறை பகுதிகளில் தூவ முடிவு செய்யப்பட்டு உள்ளது.

விதைப்பந்துகள்

பொள்ளாச்சி அருகே ஏரிப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்கள் ஆண்டுதோறும் விதைப்பந்து தயாரித்து அனைவருக்கும் இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இந்தப்பணி கடந்த 5 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு கடும் வெயில் நிலவி வருவதால் மாணவர்கள் அனைவரும் காலை 9 மணி முதல் 5 நிமிடம் மழை வேண்டி கூட்டு பிரார்த்தனை செய்து வருகின்றனர். மேலும், வேப்பம் பழங்கள் உதிரும் காலம் தொடங்கி விட்டதால் பழங்களை சேகரித்து மாணவர்கள் ஆசிரியருக்கு விதைகளை பரிசாகத் அளித்தனர். இதேபோல் சீதா, பப்பாளி, நெல்லி, சப்போட்டா ஆகிய விதைகளை மாணவர்கள் சேகரித்து வந்தனர்.

தயாரிக்கும் பயிற்சி

பள்ளி சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆசிரியை கீதா விதைப்பந்துகள் தயாரிக்கும் முறை குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். செம்மண், இயற்கை உரம், மண்புழுஉரம் ஆகியவற்றை கலந்து உருண்டையாக தயாரித்து அதற்குள்ளே ஒரு விதையை பொதித்து விதைப்பந்து உருவாக்க பயிற்சி தரப்பட்டது.

அதைத் தொடர்ந்து பல்வேறு விதைகளான வேம்பு, நெல்ல சப்போட்டா, கொய்யா, சீதா ஆகியவற்றின் விதைகளை சேகரித்து தாங்கள் வீடுகளில் விடுமுறை தினங்களில் விதைப்பந்துகளை மாணவ-மாணவிகள் தயாரித்து வந்தனர். ஒவ்வொரு மாணவரும் தலா 100 விதைப்பந்துகள் என மொத்தம் 2 ஆயிரத்து 500 விதைப்பந்துகள் தயாரித்து வந்தனர். ஓசோன் தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்க மாணவர்கள் விதைப்பந்துகளை டார்க்கெட் ஜீரோ நல அமைப்புக்கு இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளனர். வால்பாறை மற்றும் ஆழியார் போன்ற இடங்களில் பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தும் போது இந்த விதைப்பந்துகளை தூவ உள்ளனர்.

விதைப்பந்துகள் தயாரித்த 25 மாணவர்களுக்கு உலக ஓசோன் தினத்தன்று சான்றிதழ் வழங்கி பசுமை பணியை பாராட்ட உள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.


Next Story