ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து பள்ளி மாணவர்கள் சாலை மறியல்
சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டியில் அறிவியல் ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சேலம்,
சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டியில் அறிவியல் ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உயர்நிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வரும் முரளிதரன், வருகை பதிவேட்டில் கையொப்பமிட்டுவிட்டு சென்றுவிடுவார் என்றும், வேறு நபரை வைத்து பாடம் எடுப்பதாகவும் புகார் எழுந்தது.
இதையடுத்து, பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், முரளிதரனை பணியிடை நீக்கம் செய்தார். இதைக் கண்டித்து, பள்ளி மாணவர்கள் சேலம் - ஏற்காடு சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story