பள்ளி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம்
பள்ளி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்
துடியலூர்
பள்ளி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பள்ளி மாணவி
கோவையை அடுத்த பெரியமத்தம்பாளையம் பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி, வீட்டில் கடைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். அதன்பிறகு வீடு திரும்ப வில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை.
இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய் யப்பட்டது. அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் அதே பகுதியில் வசிக்கும் ஜாஹீர் உசேன் (வயது21) என்பவர் அந்த மாணவியை மைசூருக்கு கடத்தி சென்றது தெரியவந்தது.
கடத்தல்
இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், ஜாஹீர் உசேன் தனது செல்போனை விற்று மைசூருவில் உள்ள தனது தோழியின் வீட்டுக்கு மாணவியை கடத்தி சென்றது ெதரிய வந்தது.
இதையடுத்து அவருடைய தோழியின் செல்போன் எண் மூலம் அவர்கள் இருக்கும் இடத்தை போலீசார் கண்டறிந்தனர்.
உடனே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முரளி, சப்- இன்ஸ்பெக் டர்கள் சசிக்குமார், மீனாகுமாரி ஆகியோர் மைசூரு சென்று பள்ளி மாணவியை மீட்டனர்.
போக்சோவில் கைது
அவரை கடத்திய ஜாஹீர் உசேனை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர், மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.
எனவே போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜாஹீர்உசேனை கைது செய்தனர்.