ஜூஸ் என நினைத்து மது குடித்த பள்ளி மாணவிகள் மயக்கம்


ஜூஸ் என நினைத்து மது குடித்த பள்ளி மாணவிகள் மயக்கம்
x

ஜூஸ் என நினைத்து மது குடித்த பள்ளி மாணவிகள் மயக்கம் அடைந்தனர்.

காஞ்சிபுரம்

காஞ்சீபும் காமராஜர் சாலையில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் காஞ்சீபுரம் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று மதியம் 11-ம் வகுப்பு மாணவிகள் 2 பேர் திடீரென மயக்கம் அடைந்தனர். இதனால் பதற்றமடைந்த ஆசிரியர்கள் உடல் சோர்வால் மயக்கம் அடைந்திருப்பார்கள் என்று கருதி காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு மாணவிகளை பரிசோதித்த டாக்டர்கள் மாணவிகள் மது குடித்திருப்பதை உறுதி செய்தனர்.

இதனை தொடர்ந்து மாணவிகளுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மாணவிகளிடம் நடத்திய விசாரணையில் தனது தோழி எலுமிச்சை ஜூஸ் என கூறி அளித்ததாகவும் அதை குடித்தவுடன் தங்களுக்கு எதுவும் தெரியவில்லை என்றும் தெரிவித்தனர். உடனடியாக அதை எடுத்து வந்த மாணவியிடம் விசாரித்த போது தனது வீட்டில் இருந்ததாகவும், அது எலுமிச்சை ஜூஸ் என நினைத்து உடன் படிக்கும் மாணவிகளுக்கு அளித்ததாக கூறினார்.

ஜூஸ் என தோழி கொடுத்த மதுவை குடித்து 2 மாணவிகள் மயக்கம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

1 More update

Next Story