அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு
1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டன. பின்னர் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டன.
பள்ளிகள் திறப்பு
தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு கடந்த மாதம் அரையாண்டு தேர்வு முடிந்து 24-ந்தேதி முதல் கடந்த 4-ந்தேதி வரை விடுமுறை விடப்பட்டிருந்தது.
12 நாட்கள் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு நேற்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன.
பாடப்புத்தக்கங்கள்
அதன்படி அரியலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் திறக்கப்பட்டன. விடுமுறை முடிந்து விட்டதால் நேற்று வழக்கம் போல் காலையில் பள்ளிக்கு மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் சென்றனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 3-ம் பருவக்கால விலையில்லா பாடப்புத்தக்கங்கள் வினியோகிக்கப்பட்டன.
ஏற்கனவே 6 முதல் 12-ம் வகுப்ப வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து கடந்த 2-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.