காலாண்டு தோ்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு


காலாண்டு தோ்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு
x

காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டது. 2-ம் பருவ பாடப்புத்தகங்கள் வினியோகம் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை

பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் பள்ளிகளில் காலாண்டு தேர்வு கடந்த மாதத்தில் நடைபெற்றன. தேர்வு முடிவடைந்து கடந்த 28-ந் தேதி முதல் விடுமுறை விடப்பட்டன. விடுமுறை முடிந்த பின் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்திலும் பள்ளிகள் திறக்கப்பட்டன. அரசு பள்ளிகளில் 6 முதல் பிளஸ்-2 மாணவர்களுக்கு இன்று வகுப்புகள் தொடங்கின. பள்ளிகள் திறக்கப்பட்டதில் 6 மற்றும் 7-ம் வகுப்பு மாணவர்களுக்கு 2-ம் பருவத்திற்கான விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள் வழங்கப்பட்டன.

பாடப்புத்தகங்கள் வழங்கல்

புதுக்கோட்டை பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளியில் 6, 7-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள், பாடக்குறிப்பேடு, கணித உபகரணப்பெட்டி உள்ளிட்ட வைகளை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மஞ்சுளா வழங்கினார்.

மேலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட நலத்திட்டங்களை கல்வியியல் தகவல் மேலாண்மை முறைமை (எமிஸ்) இணையதளத்தில் அதாவது டி.என்.எஸ்.இ.டி செயலியில் உடனடியாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தினார்.

அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 9-ந் தேதி திறக்கப்படுகிறது.


Next Story