நாளை பள்ளிகள் திறப்பு..! சென்னையை நோக்கி படையெடுக்கும் மக்கள்..! கடும் போக்குவரத்து நெரிசல்
செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது
சென்னை,
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளிக்கூடங்கள் நாளை (திங்கட்கிழமை) திறக்கப்பட உள்ளன. இதனால் கோடை விடுமுறை முடிந்து நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர் .
இதனால் செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று மெதுவாக ஆமை போல் ஊர்ந்து செல்கிறது.
ஆமை போல் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்..சென்னைக்கு வரவே போராடும் பொதுமக்கள்https://t.co/r0BF6zf2du
— Thanthi TV (@ThanthiTV) June 11, 2023
#traffic #chengalpattu #tollgate #summerleave
Related Tags :
Next Story