தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டன: வாழை மரங்கள், தோரணங்களை கட்டி மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்...!


தினத்தந்தி 13 Jun 2022 9:12 AM IST (Updated: 13 Jun 2022 9:36 AM IST)
t-max-icont-min-icon

நீண்ட விடுமுறைக்கு பின் திறக்கப்பட்ட பள்ளிகள்.. துள்ளிக்குதிக்கும் மாணவர்கள்

சென்னை,

கோடை விடுமுறைக்கு பின், மழலையர் வகுப்பு குழந்தைகளுக்கும் (எல்.கே.ஜி., யு.கே.ஜி.), 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கும் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன.

கோடை விடுமுறைக்கு பின் தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டன. கொரோனா காலத்தில் குறைந்த நாட்களே நேரடி வகுப்பு நடந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மாணவர்களை உற்சாகமாக வரவேற்கும் விதமாக பள்ளிகளில் வாழை மரம், தோரணம் கட்டி ஆசியர்கள் மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கி வரவேற்றனர்.


Next Story