இறைச்சி விற்பனையில் நூதன மோசடி

இறைச்சி விற்பனையில் நூதன மோசடி
x

ஜோலார்பேட்டையில் நூதன முறையில் இஞைச்சி விற்பனை செய்வதாக சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து அந்த கடையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

திருப்பத்தூர்

ரூ.500-க்கு விற்பனை

நாட்டறம்பள்ளியில், வாணியம்பாடி சாலையில் மட்டன் மற்றும் சிக்கன் கடை செயல்பட்டு வருகிறது. இங்குள்ள ஒரு கடையில் ஒரு கிலோ மட்டன் ரூ.500-க்கு விற்கப்படுவதாக அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து பொது மக்கள் தங்கள் வீட்டிற்கு தேவையான கறிகளை வாங்கி சென்றனர்.

நேற்று அப்பகுதியை சேர்ந்த ஒருவர் அந்த கடைக்கு ஆட்டுக்கறி வாங்க சென்றார். அப்போது கடையில் தொங்கவிடப்பட்ட ஆட்டுக்கறி வால் மீது சந்தேகம் ஏற்பட்டு, இது எந்த வகை ஆடு என கேட்டுள்ளார். அதற்கு, கடைக்காரர் வெள்ளை ஆட்டு கறி என கூறியுள்ளார்.

வெள்ளை வாலை ஒட்டி

கறி வாங்க வந்தவர் அந்த வாலை பிடித்து இழுத்து பார்த்த போது வால் ஒட்டப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அந்த நபர் கேட்டதற்கு, நான் 400 ரூபாய்க்கு நாய்க் கறி தருவேன், அதற்கு என்ன பண்ணமுடியும் என கூறியுள்ளார். இதனை கறிவாங்க சென்ற நபர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதலங்களில் வெளியிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.

இந்த தகவலை அறிந்த இந்து முன்னணி அமைப்பு ஒன்றிய தலைவர் சிங்காரவேலன், 14-வது வார்டு கவுன்சிலர் இல.குருசேவ் ஆகியோர் இறைச்சி கடையை மூடக்கோரி நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையம் மற்றும் தாலுகா லுவலகம் முன்பு கடையை மூடக்கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். அதன் பிறகு தாசில்தார் குமாரிடம் புகார் மனு அளித்தனர்.

மனுவை பெற்றுக் கொண்ட தாசில்தார் குமார், உணவு பாதுகாப்பு அலுவலர் பழனிசாமி ஆகியோர் இறைச்சி கடைக்கு சென்று ஆய்வு செய்தனர். இதனால் பரபரப்பாக காணப்பட்டது.கறி வாங்க வந்தவர் அந்த வாலை பிடித்து இழுத்து பார்த்த போது வால் ஒட்டப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அந்த நபர் கேட்டதற்கு, நான் 400 ரூபாய்க்கு நாய்க் கறி தருவேன், அதற்கு என்ன பண்ணமுடியும் என கூறியுள்ளார். இதனை கறிவாங்க சென்ற நபர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதலங்களில் வெளியிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.

இந்த தகவலை அறிந்த இந்து முன்னணி அமைப்பு ஒன்றிய தலைவர் சிங்காரவேலன், 14-வது வார்டு கவுன்சிலர் இல.குருசேவ் ஆகியோர் இறைச்சி கடையை மூடக்கோரி நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையம் மற்றும் தாலுகா லுவலகம் முன்பு கடையை மூடக்கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். அதன் பிறகு தாசில்தார் குமாரிடம் புகார் மனு அளித்தனர்.

மனுவை பெற்றுக் கொண்ட தாசில்தார் குமார், உணவு பாதுகாப்பு அலுவலர் பழனிசாமி ஆகியோர் இறைச்சி கடைக்கு சென்று ஆய்வு செய்தனர். இதனால் பரபரப்பாக காணப்பட்டது.

Next Story