சென்னையில் சுட்டெரிக்கும் வெயில்... மீனம்பாக்கத்தில் 109 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவு


சென்னையில் சுட்டெரிக்கும் வெயில்... மீனம்பாக்கத்தில் 109 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவு
x

சென்னையில் பகல் நேரங்களில் வெப்பம் அதிகரித்து கானப்படுகிறது.

சென்னை,

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் முடிவுக்கு வந்தாலும், பல்வேறு இடங்களில் வெப்பம் வாட்டி வதைக்கிறது. குறிப்பாக சென்னையில் பகல் நேரங்களில் வெயில் கொளுத்துகிறது.

இதனால், மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். மேலும், வெப்பத்தை தணிக்க மக்கள் இளநீர், தர்பூசணி மற்றும் குளிர்பான கடைகளில் அதிகம் கூடுகின்றனர்.

இந்த நிலையில், தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 109 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. மேலும், நுங்கம்பாக்கத்தில் 108, திருத்தணி 107, வேலூரில் 106, மதுரை விமான நிலையம் 105 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும் பதிவாகி உள்ளது.


Next Story