சாரணர், சாரணியர் இயக்கம் சார்பில் முதலுதவி பயிற்சி


சாரணர், சாரணியர் இயக்கம் சார்பில் முதலுதவி பயிற்சி
x

சாரணர், சாரணியர் இயக்கம் சார்பில் முதலுதவி பயிற்சி அளிக்கப்பட்டது.

திருச்சி

தென்னக ெரயில்வே சாரணர், சாரணியர் இயக்கம் சார்பாக முதலுதவி குறித்த 5 நாள் பயிற்சி பட்டறை திருச்சி பொன்மலை ெரயில்வே மைதானம் அருகில் அம்பேத்கர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பயிற்சிக்கு சாரணர், சாரணியர் இயக்க தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். இதில் சென்னை, திருச்சி, மதுரை, பாலக்காடு, பெரம்பூர், சேலம், திருவனந்தபுரம் ஆகிய கோட்டங்களில் இருந்து ெரயில்வே ஊழியர்கள், மாணவ-மாணவிகள் என 72 பேர் கலந்து கொண்டனர். இதில் மனித உடல் பாகங்கள், ரத்த காயங்கள், சுட்ட புண், வெந்தப்புண், விஷம் குடித்தவர்கள், விபத்தில் காயம் அடைந்தவர்களை எப்படி காப்பாற்றுவது அவர்களுக்கு முதலுதவி செய்வது எப்படி என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு எப்படி முதலுதவி செய்து கட்டு போட வேண்டும், பலத்த காயம் அடைந்து நடக்க முடியாதவர்களுக்கு போர்வையை ஸ்ட்ரக்சராக மாற்றி எப்படி தூக்கி செல்ல வேண்டும் என்பது போன்ற பயிற்சிகளை மாணவ, மாணவிகள் செய்து காட்டி அசத்தினர். இந்த பயிற்சி வகுப்பில் மாநில அமைப்பு ஆணையர் மதிமாறன், மாநில அமைப்பு வழிகாட்டி ஷாலினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story