பெண் உள்பட 2 பேருக்கு அரிவாள் வெட்டு


பெண் உள்பட 2 பேருக்கு அரிவாள் வெட்டு
x

நெல்லை அருகே பெண் உள்பட 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

திருநெல்வேலி

பேட்டை:

நெல்லையை அடுத்த சுத்தமல்லி பழவூர் நடுவூர் முப்புடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் மகன் முப்புடாதி (வயது 23). அதே பகுதியை சேர்ந்தவர் அவரது பெரியம்மா முத்துக்கிருஷ்ணன் மனைவி இளங்காமணி (52). இவர்கள் இருவரும் கடந்த 23-ந் தேதி பழவூர் உச்சிமாகாளி அம்மன் கோவில் தெருவில் நடந்த தெருக்கூத்து நிகழ்ச்சியை பார்க்கச் சென்றனர். அப்போது அங்கு வந்த பழவூர் முப்புடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்லப்பா மகன் தாமஸ் (26), முருகன் மகன் சுதாகர் (23), பட்டன் கல்லூர் எம்.ஜி.ஆர். காலனியைச் சேர்ந்த செல்லத்துரை மகன் பிரகாஷ் (20) உள்ளிட்ட 5 பேர் பெண் கலைஞர்களை கேலி செய்ததாக கூறப்படுகிறது. இதனை முப்புடாதி, இளங்காமணி ஆகிய இருவரும் தட்டி கேட்டனர்.

இந்த முன்விரோதம் தொடர்பாக நேற்று முன்தினம் இரவு முப்புடாதி வீட்டிற்கு சென்ற தாமஸ் உள்பட 5 பேரும் சேர்ந்து முப்புடாதியை அவதூறாகப் பேசி அரிவாளால் வெட்டினர். தொடர்ந்து அங்கிருந்து சென்று வயலில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த இளங்காமணியை வழிமறித்து அவரையும் அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த இருவரும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் சுத்தமல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் வழக்குப்பதிவு செய்து தாமஸ் உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்தார்.

1 More update

Related Tags :
Next Story