பெண் உள்பட 6 பேருக்கு அரிவாள் வெட்டு
கந்தம்பாளையம் அருகே இரு தரப்பினர் மோதிக்கொண்டதில் பெண் உள்பட 6 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
கந்தம்பாளையம்:-
கந்தம்பாளையம் அருகே இரு தரப்பினர் மோதிக்கொண்டதில் பெண் உள்பட 6 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
இரு தரப்பினர் மோதல்
கந்தம்பாளையம் அருகே பெருங்குறிச்சி கொசவம்பாளையம் பாப்பன் என்ற காட்டில் ஆறுமுகம் (வயது 56). இளங்கோ (44), சங்கீத்குமார் (27) ஆகியோர் அவர்களது நிலத்தில் டிராக்டரில் உழவு செய்து கொண்டிருந்தனர்.
அப்போது சங்கீதா (31) என்பவர் செல்போனில் படம் பிடித்துக் கொண்டிருந்ததாக தெரிகிறது. உடனே இவர்கள் 3 பேரும் எங்களை ஏன் படம் பிடிக்கிறாய் என்று கூறி தகராறு ெசய்ததுடன் செல்போனை பிடுங்கி வீசியதாக தெரிகிறது.
6 பேருக்கு அரிவாள் வெட்டு
இதை பார்த்த சங்கீதா தரப்பை சேர்ந்த பழனிவேல், செந்தில்ராஜா ஆகியோர் தட்டிக்கேட்டனர். அப்போது அவர்களுக்குள் ஏற்கனவே நிலத்தகராறு தொடர்பாக முன்விரோதம் இருந்ததால் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் அரிவாள், கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் மோதிக்கொண்டனர்.
ஒருவருக்கொருவர் கம்பியால் தாக்கியும், அரிவாளால் வெட்டியும் கொண்டனர். இந்த மோதலில் ஆறுமுகம், சங்கீத்குமார், இளங்கோ, சங்கீதா, பழனிவேலு, செந்தில்ராஜா ஆகிய 6 பேரும் அரிவாளால் வெட்டில் காயம் அடைந்தனர். திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த மோதல் சம்பவத்தால் கந்தம்பாளையம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.