டிரைவருக்கு அரிவாள் வெட்டு
டிரைவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
சிவகாசி,
சிவகாசி பராசக்தி காலனியை சேர்ந்தவர் சங்கிலிராஜ் மகன் சதீஷ்குமார் (வயது 26). இவர் சொந்தமாக சரக்கு வாகனம் வைத்து டிரைவராக பணியாற்றி வருகிறார். சதீஷ்குமார் கடந்த காலங்களில் பராசக்தி காலனியை சேர்ந்த மாரிமுத்து, ரிசர்வ்லைன் பகுதியை சேர்ந்த கோகுல் ஆகியோருடன் நட்புடன் இருந்துள்ளார். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிவகாசியில் நடைபெற்ற ஒரு கொலை வழக்கில் கோகுல் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இதற்கிடையில் சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் பழைய பேப்பர் பண்டல்களை சதீஷ்குமார் தனது சரக்கு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத 3 பேர், சதீஷ்குமாரிடம் தகராறு செய்து அவரை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த சதீஷ்குமார் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் குறித்து அவர் சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.