விவசாயிக்கு அரிவாள் வெட்டு


விவசாயிக்கு அரிவாள் வெட்டு
x

வீரவநல்லூர் அருகே விவசாயிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

வீரவநல்லூர் அருகே ராஜகுத்தாலபேரியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 50) விவசாயி. இவருக்கும், இவரது அண்ணன் நடராஜன் என்பவரது மகன் பொன்ராஜூக்கும் இடையே சொத்து பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை தாமிரபரணி ஆற்றில் நின்று கொண்டிருந்த கிருஷ்ணனை, பொன்ராஜ் அரிவாளால் வெட்டி தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த கிருஷ்ணன், நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பொன்ராஜை கைது செய்தனர்.


Next Story