தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு


தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு
x

ஏர்வாடி அருகே தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

திருநெல்வேலி

ஏர்வாடி:

ஏர்வாடி அருகே உள்ள டோனாவூர் சர்ச் தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 55). தொழிலாளியான இவர் மும்பை தாராவியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். தற்போது அவர் தனது தாயாரை பார்க்க டோனாவூர் வந்துள்ளார். இவருக்கும், அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ராஜாமணி மகன் முத்துசெல்வனுக்கும் சொத்து பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறது.

இந்நிலையில் சம்பவத்தன்று முத்துசெல்வன், செல்வகுமார் வீட்டை நோக்கி சி.சி.டிவி கேமரா பொருத்தியுள்ளார். இதற்கு செல்வகுமார் எதிர்ப்பு தெரிவித்து, கேமராவை பிடுங்கி எறிந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த முத்துசெல்வன், செல்வகுமாரை அரிவாளால் வெட்டினார். இதில் காயம் அடைந்த செல்வகுமார் நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் சுகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story