தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு; மனைவி கைது
தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு; மனைவி கைது
கோட்டூர்
பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் மலையாண்டிபட்டிணத்தை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 55). கூலி தொழிலாளி. இவரது மனைவி சத்தியவாணி (55). இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 மாதமாக பிரிந்து வாழ்ந்து வருவதாக தெரிகிறது.
இதற்கிடையில் பேத்திக்கு சீர் செய்ததால் காளியப்பனுக்கு பணம் அதிகளவில் செலவாகி விட்டது. இதனால் சத்தியவாணி வசித்து வரும் வீட்டை விற்பனை செய்ய அவர் முடிவு செய்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. வாக்குவாதம் முற்றவே சத்தியவாணி தகாத வார்த்தையால் திட்டி காளியப்பனை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த காளியப்பன் கோட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை பெற்ற பிறகு, பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டூர் போலீசார் வழக்குபதிவு செய்து சத்தியவாணியை கைது செய்தனர்.