துக்க நிகழ்ச்சிக்கு சென்ற மூதாட்டிக்கு அரிவாள் வெட்டு


துக்க நிகழ்ச்சிக்கு சென்ற மூதாட்டிக்கு அரிவாள் வெட்டு
x

ஜெயங்கொண்டம் அருகே துக்க நிகழ்ச்சிக்கு சென்ற அரிவாளால் வெட்டிய அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர்

துக்க நிகழ்ச்சி

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கழுவந்தோண்டி கிராமத்தை சேர்ந்தவர் மருதமுத்து மனைவி சின்னம்மா. இவரது மறைவையொட்டி பால்தெளி காரியம் நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது அதே ஊரை சேர்ந்த வெள்ளையன் என்கிற பாலசுப்பிரமணியன் (வயது 45) என்பவர் தனது தாயார் வசந்தாவுடன் (70) துக்க நிகழ்ச்சிக்கு சென்றார்.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த அதே ஊரை சேர்ந்த செல்லதுரை மகன் சக்திவேல் (33), அவரது சகோதரர் முருகானந்தம் (38) ஆகியோர் பாலசுப்பிரமணியன் மற்றும் அவரது தாயார் வசந்தாவை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர்.

அரிவாள் வெட்டு

பின்னர் மூதாட்டி வசந்தாவை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த மூதாட்டி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து முருகானந்தம், சக்திவேல் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

1 More update

Next Story