வியாபாரிக்கு அரிவாள் வெட்டு
மானூர் அருகே வியாபாரிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
திருநெல்வேலி
மானூர்:
மானூர் அருகே உள்ள பள்ளமடையைச் சேர்ந்தவர் முத்துசெல்வம் (வயது 22). பால் வியாபாரி. இவர் தனது வீட்டில் மாடுகளுக்கு தீவனமாக தவிடு சேமித்து வைத்துள்ளார். அதனை அதே பகுதியை சேர்ந்த சிவன்பெருமாள் (33) என்பவரின் 9 வயது மகள், அவ்வப்போது எடுத்துச்சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து முத்துசெல்வத்தின் தாயார், சிவன்பெருமாளின் தாயாரிடம் கூறி கண்டிக்குமாறு அறிவுறுத்தி உள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சிவன்பெருமாள், முத்துசெல்வத்தை அவதூறாக பேசி, அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த முத்துசெல்வம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story