தார் சாலை அமைக்கக்கோரி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மறியல்


தார் சாலை அமைக்கக்கோரி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மறியல்
x

தார் சாலை அமைக்கக்கோரி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை

புதுக்ேகாட்டை மாவட்டம், மணமேல்குடி அடுத்த கிருஷ்ணாஜிபட்டினம் ஊராட்சியில் திருமங்கலப்பட்டினம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தார்சாலை பழுதடைந்த நிலையில் குண்டும், குழியுமாக இன்று வரை உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் சார்பில், பலமுறை ஊராட்சி நிர்வாகத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இன்று வரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதனால் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், திருமங்கலப்பட்டினத்தில் தார்சாலை அமைக்க கோரி கிருஷ்ணாஜிபட்டிணம் கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட தலைவர் செய்யது அகமது தலைமை தாங்கினார். இதில் பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த மணமேல்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து பெண்கள் உள்பட 60 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சாலை மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story