1 டன் கடல் அட்டைகள் பறிமுதல்


1 டன் கடல் அட்டைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 14 Dec 2022 6:45 PM GMT (Updated: 14 Dec 2022 6:46 PM GMT)

1 டன் கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

ராமநாதபுரம்

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள வேதாளை கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு கடல் அட்டைகள் கடத்தப்பட உள்ளதாக ராமநாதபுரம் மாவட்ட போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் தனிப்பிரிவு போலீசார் நேற்று இரவு வேதாளை கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த நாட்டுப்படகு ஒன்றை சோதனை செய்தனர். அதில், சுமார் 20 மூடைகளில் 1 டன்னுக்கும் அதிகமான கடல் அட்டைகள் இருந்ததும், இலங்கைக்கு கடத்த முயன்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடல் அட்டைகள் மற்றும் படகையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அந்த படகு யாருக்கு சொந்தமானது? கடல் அட்டைகளை ஏற்றி வைத்த நபர்கள் யார்? என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story