கோவையில் கடல் மீன் விலை உயர்வு


கோவையில் கடல் மீன் விலை உயர்வு
x

கேரளாவில் மீன்பிடி தடைகாலம் தொடங்கியதால் கோவையில் கடல் மீன் விலை உயர்ந்தது.

கோயம்புத்தூர்


கோவை உக்கடம் லாரிபேட்டை மொத்த மீன் மார்க்கெட், செல்வபுரம் பைபாஸ்சாலை சில்லரை மீன் விற்பனை மார்க்கெட்டுகளுக்கு ராமேசுவரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட ஊர்களில் இருந்தும், கேரள மாநிலம் மங்களாவரம், திரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் கடல்மீன்கள் விற்பனைக்கு வருகின்றன.

தமிழ்நாட்டில் மீன்பிடி தடைகாலம் முடிந்துள்ளது. ஆனால் கேரளாவில் மீன்பிடி தடைகாலம் தொடங்கி உள்ளது. இதனால் கேரளாவில் இருந்து கோவைக்கு மீன் வரத்து குறைந்துள்ளது.இதனால் கோவையில் கடல் மீன்களின் விலை உயர்ந்துள்ளது.

மீன்விலை விவரம் வருமாறு:-

வஞ்சிரம் ஒரு கிலோ ரூ.1,200, வாவல்- ரூ.1100, விளைமீன், பாறை -ரூ.600, நெத்திலி- ரூ.350, ஊளி-ரூ.500, மத்தி -ரூ.250, இறால்- ரூ.500. அதே நேரம் டேம் மீன்களின் விலை குறைந்துள்ளது. கட்லா கிலோ ரூ.120, ரோகு 120-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதுகுறித்து உக்கடம் மீன் மார்க்கெட் வியாபாரி அப்பாஸ் கூறும்போது, "தமிழ்நாட்டில் கடலோர பகுதிகளில் பிடிபடும் பெரிய மீன்கள் கேரளாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாலும், கேரளாவில் மீன்பிடி தடைகாலம் என்பதாலும் கடல் மீன்கள் விலை உயர்ந்துள்ளது. இந்தநிலை 2 வாரத்துக்கு நீடிக்கும். அதன்பின்னர் மீனிகளின் விலை குறையும்" என்று தெரிவித்தார்.


Next Story