கடலூர் அரசு கல்லூரியில் கடல் ஆமைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கடலூர் அரசு கல்லூரியில் கடல் ஆமைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கடலூர் பெரியார் அரசு கல்லூரியில் விலங்கியல் துறை, மாவட்ட வனத்துறை சார்பில் கடல் ஆமைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் விலங்கியல் மன்றம் தொடக்க விழா நடந்தது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் ஜோதி வெங்கடேசுவரன் தலைமை தாங்கி, மரம் வளர்ப்பதின் முக்கியத்துவத்தை பற்றி விளக்கி பேசினார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக கடலூர் மாவட்ட வனத்துறை அதிகாரி பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டு காடுகளைப் பற்றி எடுத்துக் கூறியதோடு விலங்கியல் மன்றத்தை தொடங்கி வைத்து பேசினார். வனச்சரக அலுவலர் அப்துல் ஹமீது காடுகளில் ஏற்படும் தீ விபத்துகள் பற்றியும். தடுக்கும் முறை பற்றியும் பேசினார். வனசரகர் குணசேகரன், ரெட்லி ஆமைகளின் வாழ்க்கை சுழற்சி பற்றி பேசினார்.
முன்னதாக துறை தலைவர் கண்ணன் வரவேற்றார். இதில் பல்வேறு துறை தலைவர்கள், மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் சின்னதுரை நன்றி கூறினார்.






